மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 3,000 ஹெக்டேர் விளைநிலம் பாதிப்பு: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 3,000 ஹெக்டேர் விளைநிலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சீர்காழி -1,088 ஹெக்டேர், கொள்ளிடம் 1,200 ஹெக்டேர், செம்பனார்கோவில் 600 ஹெக்டேர் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களாக நீரில் மூழ்கிய விளை நிலங்களை அரசு கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் கோரிக்கையை அடுத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சீர்காழி அருகே நல்லூர் கிராமத்தில் ஆய்வு நடத்தி வருகிறார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு

நீட் தேர்வு தேவையா என்பது பற்றி முன்னுரிமை அளித்து நாடாளுமன்றக் நிலைக்குழு விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்