மே 27 நிதி ஆயோக் கூட்டத்தை மம்தா புறக்கணிப்பு

கொல்கத்தா: மே 27ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டுக்கான நிதி ஆயோக் ஆட்சி மன்ற குழு கூட்டம் மே 27ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் விவசாயம், சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பிரச்னைகள் விவாதிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் மே 27ம் தேதி கூடும் நிதி ஆயோக் கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணிப்பதாக மாநில செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் அதற்கான காரணங்கள் எதுவும் வௌியிடப்படவில்லை. ஏற்கனவே நிதி ஆயோக் கூட்டங்களை புறக்கணித்த மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் பங்கேற்று மாநில பிரச்னைகள் பற்றி எடுத்துரைக்க போவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசுப் பேருந்துகளுக்கு விதித்த அபராதம் வாபஸ்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு

டெல்லி, அரியானா உட்பட 58 தொகுதிகளில் 6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: ஜனாதிபதி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாக்களிப்பு