மகாராஷ்டிராவில் பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

மகாராஷ்டிர: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்து மீது லாரி மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பேருந்தில் சிக்கியிருந்தவர்களை பொதுமக்கள், மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்டனர்.

இன்று காலை 10 மணியளவில், மும்பை-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் சந்த்வாட் அருகே ரோட் காட் என்ற இடத்தில் ஒரு பேருந்து பயங்கரமான விபத்தில் சிக்கியது. பேருந்தின் டயர் வெடிதத்தில் எதிரே வந்த லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை சாலையில் வரிசையாக வைத்திருந்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் வராததால் காயமடைந்தவர்களும் சாலையில் படுத்திருந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பஸ் ஜல்கானில் இருந்து வசாய் நோக்கி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்தவர்களை அடையாளம் காணும் பணி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு!

அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் :வைகோ கண்டனம்

விக்கிரவாண்டி இடைத் தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.அன்புமணி போட்டி!