மதுரை மெட்ரோ ரயில் சேவைக்கு 75 இடங்களில் மண் பரிசோதனை

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக 75 இடங்களில் மண் தர பரிசோதனை நடந்து வருகிறது. மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில், திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. அதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்காக 2 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 75 நாள் காலக் கெடுவுக்குள் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. கடந்த மாதம் திருமங்கலம் – ஒத்தக்கடை வழித்தடத்தில் எந்தெந்த பகுதியில் அதிக போக்குவரத்து உள்ளது.

மெட்ரோ ரயில் அமைப்பதால் மேற்கொள்ள வேண்டிய பணிகள், கட்ட வேண்டிய பால எண்ணிக்கை, சுரங்கப்பாதை அமைவிடம், தற்போதைய கட்டுமான விபரம், மெட்ரோ ரயில் தண்டவாளம் அமைக்க பூமிக்கடியில் கான்கிரீட் தூண் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை உத்தேச வழித்தடத்தில், 500 மீட்டருக்கு ஒரு இடத்தில் ஆழ்துளையிட்டு மண் மாதிரி எடுக்கப்படுகிறது. தற்போது 75க்கும் மேற்பட்ட இடங்களில் துளையிட்டு மண் தர பரிசோதனை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 50 இடங்களில் மண் ஆய்வுப்பணிகள் முடிந்துள்ளன. மாட்டுத்தாவணி, உத்தங்குடி, ஒத்தக்கடை பகுதியில் சுமார் 13 முதல் 15 மீட்டரில் கடினமான பாறை தென்படுகிறது. அதன் மாதிரியை ஆழ்குழாய் இயந்திர ஒட்டுனர்கள் சேகரித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் வழங்கி வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

டெல்லியை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்

வெங்கத்தூர் கண்டிகை துலுக்கானத்தம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா

விசிக பிரமுகருக்கு கொலை மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு