ம.பி. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழப்பு 11-ஆக அதிகரிப்பு :ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

போபால் : மத்தியப் பிரதேசத்தின் ஹர்தா பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழப்பு 11-ஆக அதிகரித்துள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் பலத்த காயமடைந்த 100 பேர் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு ஆலை அருகே உள்ள 60 வீடுகளுக்கு தீ பரவியதால் குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ள மத்திய பிரதேச அரசு, பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது.

Related posts

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு