மபி முன்னாள் முதல்வர் கமல்நாத் மகனுக்கு ரூ.700 கோடி சொத்து

போபால்: மபியில் காங்கிரஸ் முதல்வராக இருந்த கமல்நாத் இருந்த கமல்நாத் சிந்த்வாரா தொகுதியில் 9 முறை வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். நடைபெற உள்ள தேர்தலில் கமல்நாத்தின் மகன் நகுல்நாத் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதி உள்பட மாநிலத்தில் உள்ள 6 தொகுதிகள் ஏப்.19ம் தேதி முதல் கட்ட தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில், நகுல் நாத் தனது சொத்துகள் பற்றி பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் தனக்கு ரூ.700 கோடிக்கு சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பணம், பங்குகள்,பத்திரங்கள் உள்ளிட்ட அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.649 கோடி. அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.48 கோடி எனவும் அவருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை என்பது அவர் சமர்ப்பித்துள்ள பிரமாண பத்திரத்தில் இருந்து தெரிய வருகிறது. நகுல்நாத் கடந்த 2019 மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடுகையில் சொத்து மதிப்பை ரூ.660 கோடி என குறிப்பிட்டிருந்தார்.
5 ஆண்டுகளில் அவருடைய சொத்து மதிப்பு ரூ.40 கோடி அதிகரித்துள்ளது.

Related posts

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் : டெல்லியில் நடைபெறும் வாகன பேரணியில் பங்கேற்கிறார்!!

ஆந்திராவில் தவிடு மூட்டைகளுக்கு மத்தியில் பெட்டி பெட்டியாக வைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.7 கோடி பறிமுதல்

தமிழக மக்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே 14 வரை வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா தகவல் : எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?