விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டிய கலெக்டர்

தேனி, மார்ச் 29: தேனி புதிய பஸ்நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கான ஸ்டிக்கர்களை பஸ்களில் கலெக்டர் ஒட்டினார். தேனி பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்ஒருகட்டமாக தேனி புதிய பஸ் நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கலந்து கொண்டு பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

Related posts

காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை மிரட்டி சிறுவன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு

காட்பாடியில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 சவரன் திருட்டு

அதிமுக தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைந்து வருவார்கள் வேலூரில் டிவிவி தினகரன் பேட்டி