இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமை இந்தியாவில், 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) 7,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் நேற்று (29.04.2023) 7,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 5874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,39,515 இருந்து 4,49,45,389 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளார். உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,533 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 8,148 பேர் டிஸ்சார்ஜ் ஆனநிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,43,64,841 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 51,314 இருந்து 49,015 ஆக குறைந்துள்ளது.

Related posts

தங்கம் விலையில் மேலும் மாற்றம் சவரன் விலை 2 நாட்களில் ரூ.480 உயர்ந்தது

பாவேந்தரின் 133வது பிறந்த நாள் மதுரையில் 29ம்தேதி தமிழ்க்கவிஞர் நாளாக கொண்டாட்டம்

சென்னையில் இணையவசதியுடன் 200 அரசுப்பள்ளிகளில் கணினி வழிக்கல்வி: பள்ளிக்கல்வி இயக்ககம் ஏற்பாடு