நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி: காங்கோவில் சோகம்

கின்ஷாசா: காங்கோ நாட்டின் வடமேற்கு மொங்காலா மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக லிசல் நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், மலை அடிவாரத்தில் கட்டப்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இரவு நேரத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அந்த வீடுகளில் வசித்து வந்த 17 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதால், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருந்தும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாகாண கவர்னர் சீசர் லிம்பாயா எம்பாங்கிசா தெரிவித்தார்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்