ஈடன்கார்டனில் இன்று கொல்கத்தா-ராஜஸ்தான் பலப்பரீட்சை

கொல்கத்தா: ஐ.பி.எல். டி20 தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் 56வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி தனது முந்தைய 2 போட்டிகளில் ஐதராபாத், பஞ்சாப் அணிகளை வீழ்த்திய உத்வேகத்துடன் உள்ளது. கொல்கத்தா அணியில் ரிங்கு சிங், நிதிஷ்ராணா, வெங்கடேஷ் அய்யர், ஜேசன் ராய், ஆந்த்ரே ரஸ்சல் என்று அதிரடி பேட்டிங் பட்டாளம் உள்ளது. பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி (17 விக்கெட்), சுயாஷ் ஷர்மா, சுனில் நரேன், ஹர்ஷித் ராணா ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 11 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்வி என 10 புள்ளிகளுடன் உள்ளது.

முதல் 5 போட்டிகளில் 4-ல் வெற்றிபெற்ற அந்த அணி அடுத்த 6 போட்டிகளில் 5-ல் தோல்வியடைந்து தடுமாறி வருகிறது. ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் (477 ரன்கள்), ஜோஸ் பட்லர் (392 ரன்கள்), சஞ்சு சாம்சன், ஹெட்மயர் பேட்டிங்கிலும், பந்துவீச்சில் யுஸ்வேந்திர சாஹல் (17 விக்கெட்), ஆர்.அஸ்வின் (14 விக்கெட்), டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மா, ஆடம் ஜம்பாவும் நல்ல நிலையில் உள்ளனர். இந்த ஆட்டம் இரு அணிக்குமே முக்கியமானதாகும். இதில் வெற்றி பெறும் அணி பிளே-ஆப் வாய்ப்பில் நீடிக்க முடியும். தோல்வி பெறும் அணியின் வாய்ப்பு மங்கிவிடும். எனவே அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டியில் அனல்பறக்கும். ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14 போட்டிகளில் கொல்கத்தாவும், 12 போட்டிகளில் ராஜஸ்தானும் வென்று இருக்கின்றன.

Related posts

பலத்த சூறைக்காற்று காரணமாக பெங்களூரு செல்ல வேண்டிய விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்!

உதகையில் 126-வது மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்குகிறது!

சென்னை சூளைமேட்டில் நடந்து சென்ற நீலா, அவரது கணவர் சுரேஷை கடித்த நாய் ப்ளூ கிராஸிடம் ஒப்படைப்பு!