கொல்கத்தா விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசி விபத்து: இறக்கைகள் சேதம்

கொல்கத்தா: கொல்கத்தா விமான நிலையத்தில் நடந்த விபத்தில், இண்டிகோ விமானமும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அருகருகே வந்ததில் விமானங்களின் இறக்கைகளிலும் சேதம் ஏற்பட்டது. நேற்று காலை 11 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு புறப்படத் தயாரானது. அதே சமயத்தில் இண்டிகோ விமானம் தர்பங்காவுக்குச் புறப்பட்டது. ஓடு பாதைக்கு அருகில் உள்ள டாக்ஸிவேயில் 2 விமானங்களும் அருகருகே வந்தன. அப்போது 2 விமானங்களின் இறக்கைகளும் உரசியதில் சேதம் ஏற்பட்டது. இதில் பயணிகளுக்கோ, பணியாளர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்தை ஏற்படுத்திய இண்டிகோ விமானி, துணை விமானியின் பெயர்களை விமானிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்தும்படி கேரள அரசுக்கு எச்சரிக்கை: தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்

சென்னை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதம்: பயணிகள் பெரும் தவிப்பு

மதுரவாயலில் குப்பை சேகரிக்கும் தானியங்கி வாகனம் ஆளில்லாமல் ஓடியதில் அடுத்து அடுத்து 2 வாகனங்களில் மோதி விபத்து