சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு

திருச்செங்கோடு, மார்ச் 28: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வழங்கிய தேர்தல் திருவிழா அழைப்பிதழை, திருச்செங்கோடு நகராட்சி தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் மாரியம்மாள், பரப்புரையாளர்கள் ஆனந்தி, சௌந்தர்யா, மஞ்சுளா, சுமதி மற்றும் சுய உதவிக்குழு பணியாளர்கள் வீடு வீடாகச்சென்று, சீர்வரிசை தட்டுகளுடன் அழைப்பிதழை வழங்கினர். அப்போது, அனைவரும், தவறாது வாக்களிக்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் சேகர், சுகாதார அலுவலர் வெங்கடாசலம், துப்புரவு ஆய்வாளர்கள் சிவக்குமார், சுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி