கொடைக்கானலில் பல்கலை மாணவிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஆளுநர் ஆர்.என்.ரவி,அன்னை தெரசா மகளிர் பல்கலை மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கொடைக்கானலில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, துணைவியாருடன் நேற்று காலை அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள ரோஜா பூங்காவிற்கு சென்று, பேட்டரி கார் மூலம் பல வண்ண பூக்களை கண்டு ரசித்தார். பூங்கா பணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அருகிலுள்ள கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மையத்திற்கு சென்றார். அங்கு வானிலை ஆராய்ச்சி பற்றி விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார். ஆளுநரின் வருகையால் அப்சர்வேட்டரி பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதன்பிறகு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு ஆதிவாசி மக்கள் தங்களது பாரம்பரிய இசை கருவியை இசைத்தும், நடனமாடியும் வரவேற்றனர். ஆதிவாசி மக்கள் தங்களுக்கு வனச்சட்டப்படி பட்டா வழங்க வேண்டும், புலையன் இனத்திற்கு ஆதிவாசி சான்று வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் ஆளுநர் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள அன்னை தெரசா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்து, காந்தியடிகளின் அருங்காட்சியகத்தை கண்டு ரசித்தார். இதை தொடர்ந்து பல்கலை கருத்தரங்க கூடத்தில் நடந்த மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மாலையில் ஆளுநர் பிரையண்ட் பூங்காவை சுற்றி பார்த்தார்.

Related posts

ஒடிசாவில் 117 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொடுமையால் ரூர்கேலாவில் 10 பேர் பலி

கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கான அனுமதி இன்றுடன் முடிவு.

உ.பி.யில் அதிக வெப்பத்தால் 6 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு