கிச்சன் டிப்ஸ்

* காபித்தூளை பாட்டிலில் கொட்டி வைக்காமல் பேக்குடன் அப்படியே பாட்டிலில் வைத்து மூடி வைத்தால் காபித்தூள் மணம் மாறாமல்இருக்கும்.
* அடைமாவு புளித்துவிட்டால், இட்லித் தட்டில் வேக வைத்து எடுத்து உதிர்த்து கடுகு, மஞ்சள் தூள், கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு, வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து சேர்த்து கிளறினால் காரப்புட்டு ரெடி.
* தோசைமாவில் தேங்காய்ப்பால் சேர்த்து தோசை வார்த்தால்சுவையும் மணமும் அசத்தும்.
* பேரீச்சம் பழத்தை பால், தேன்விட்டு அரைத்து சப்பாத்தி மாவில் கலந்து அதனுடன் தூளாக்கிய முந்திரி, பாதாம், உலர் திராட்சை சேர்த்து பிசைந்து சப்பாத்தி சுட்டால் குழந்தைகளுக்கு பிடித்தமான, சத்தான ஸ்வீட் சப்பாத்தி தயார்.
* கறிவேப்பிலை துவையலுக்கு உளுந்தம் பருப்புக்கு பதிலாக வேர்க்கடலையை வறுத்துப் போட்டால் துவையல் சுவையாக இருக்கும்.
* உருளைக்கிழங்கை உப்பு கரைத்த நீரில் இரண்டு நிமிடம் போட்டு எடுத்து வைத்துக் கொண்டால் பல நாட்கள் கெடாமல் புதுசாக இருக்கும். எந்த வகை கீரையானாலும்,அதை சமைக்கும்போது அளவுக்கு அதிகமாக காரம், உப்பு, புளி சேர்க்கக் கூடாது. இதனால் கீரையிலுள்ள சத்துக்கள் வீணாகும்.                            அண்ணா அன்பழகன்
* உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது அதில் அரைக்கரண்டி புளிப்பில்லாத கெட்டித் தயிர் ஊற்றி வதக்கினால் மிகவும் சுவையாக இருக்கும்.
* தனி ஜவ்வரிசி மட்டும் போட்டு பாயசம் செய்யும் போது, 2 தேக்கரண்டி வறுத்த கோதுமை மாவையும் பாலில் கரைத்து ஊற்றிச் செய்தால் பாயசம் கெட்டியாக இருப்பதோடுமணமாகவும் இருக்கும்.
* அடைக்கு ஊறப்போடும்போது துவரம் பருப்புக்குப் பதில் கொள்ளை ஊறப்போட்டால் அடை சுவையாக இருக்கும். வாய்வுத் தொந்தரவும் இருக்காது.
* பொரியல் செய்யும்போது, காரப் பொடிக்குப் பதிலாக தேங்காய்ப்பொடி சேர்த்தால், பொரியலின் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
* கொத்துமல்லித் துவையல் அரைக்கும்போது மிளகாய்க்குப் பதில் மிளகை வறுத்து சேர்த்து அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* ரவா உப்புமா மீந்துவிட்டால் அதில் சிறிதளவு அரிசிமாவைக் கலந்து வடைபோல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.– கவிதா பாலாஜி கணேஷ்
* முள்ளங்கி, காலிஃப்ளவர் போன்ற காய்களை வாங்கும்போது, அவற்றின் இலைகளோடு சேர்த்து வாங்க வேண்டும். அந்த இலைகளை பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு சமைத்து சாப்பிட நன்றாக இருக்கும். சூப் தயாரித்தும் சாப்பிடலாம்.
* சாம்பார் செய்யும்போது, அரைக்க வேண்டிய சாமான்களுடன் கொஞ்சம் கசகசாவை வறுத்து அரைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
* தயிர் பச்சடி, சாலட் என்று எது செய்தாலும், தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட, வாசனை சற்று தூக்கலாக இருக்கும்.
* தேங்காய் துருவும்போது, தேங்காய் ஓடும் சேர்ந்து வரும் அளவிற்கு துருவக்கூடாது. தேங்காய் ஓட்டுத்தூள் குடல் புண்களை ஏற்படுத்தும்.
* காய்கறிகளை நறுக்கிய உடனேயே அவற்றை சமைக்க வேண்டும். அப்படி சமைக்காமல், வெகுநேரம் வைத்திருந்தால், காற்றுபட்டு, அவற்றில் உள்ள அனைத்து சத்துக்களும் போய்விடும். சத்துக்கள் போனகாய்கறிகளை உண்பதால் எந்த பலனும் இல்லை. எனவே, நறுக்கிய உடனே சமைத்து விட வேண்டும்.
* சாறுபிழிந்த எலுமிச்சை பழத்தோலைத் தூக்கி எறிந்துவிடாமல் உருளைக்கிழங்கு வேக வைக்கும்போது அதோடு சேர்த்து வேக வைய்யுங்கள். உருளைக்கிழங்கு பொரியல் கமகமவென்று மணம் வீசும்.
* முருங்கைக் கீரை சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரையைக் கலந்து சமைக்க ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் உதிரியாக இருக்கும்.
* கீரையை வேகவிடும்போது, சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால், கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
* வாழைத்தண்டு கூட்டு மற்றும் பொரியல் செய்யும்போது, அத்துடன் சிறிது முருங்கைக் கீரையும் சேர்த்துச் செய்தால், சுவையும் மணமும் மிகவும் நன்றாக இருக்கும். உடம்புக்கும் மிகவும் நல்லது.
* வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறைத் தெளிக்கவும்.
* வாழைப் பூவை நறுக்கிச் சுத்தம் செய்வதே பெரிய வேலை, இதோ ஓர் எளிய முறை… பூவை ஆய்ந்ததும் முழுசாக மிக்ஸியில் போட்டு இரண்டே சுற்று சுற்றினால் போதும் ஒரே அளவில் பூவாக உதிரும்.
* பிடிகருணையை வேக வைக்கும்போது சில கொய்யா இலைகளையும் சேர்த்து வேக வைத்தால் சிறிது கூட காரல் இருக்காது.
* வெங்காயம், பூண்டு, பலாக்கொட்டை ஆகியவற்றை சுலபமாக உரிக்க இரண்டு மூன்று சொட்டு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு நன்றாக அவற்றை தேய்த்து வைத்து விடுங்கள். மறுநாள் உரிக்க ஒரு நிமிடம் கூட ஆகாது.
* சேமியா, ரவை போன்றவைகளை வறுத்து வைத்துக் கொண்டால் நிமிஷத்தில் உப்புமா, சேமியா பிரியாணி ஈசியாக தயாரித்து விடலாம்.
* ஒரு கிலோ அளவிற்கு தோசைமாவு அரைத்து வைத்துக் கொண்டால் இட்லி, தோசை, ஆப்பம், ஊத்தாப்பம், குழிப்பணியாரம் என வாரம் முழுவதும் டிபன் டென்ஷன் இருக்காது. அவசரத்துக்கு கை கொடுக்கும்.
* கொண்டைக்கடலையை நிறைய ஊறவைத்து ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது எடுத்து சுண்டல், பூரிக்கு சென்னா, சாலட் போன்றவை எளிதாக தயாரித்துக் கொள்ளலாம்.
* மோர் குழம்புக்கு வறுத்து அரைக்க வேண்டியவைகளை நிறைய தயார் செய்து மூன்று பாகமாக பிரித்துஃபிரீசரில் வைத்துக் கொண்டால், சட்டுன்னு மோர்க்குழம்பு தயார் செய்து விடலாம்.
* புளி பேஸ்ட் தயாரித்து ஐஸ் க்யூப் ஆக்கி வைத்துக் கொண்டால், புளிக் குழம்பு, வத்தல் குழம்பு, மீன் குழம்பு, கருவாட்டுக் குழம்பு, ரசம் என எல்லாவற்றிற்கும் எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
– பா.பரத்

Related posts

எடியூரப்பா மீது போக்சோ வழக்கில் புகாரளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு!

தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்புச் சான்று வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு தடை

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் மாணவர் விடுதிகள் உரிமம் பெற வேண்டும்: மதுரை ஆட்சியர்