மினி ஸ்வீட் ஆப்பம்

தேவையான பொருட்கள்

தேங்காய்த்துருவல் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
வெல்லம் -தேவையான அளவு
ஏலக்காய் தூள் – சிறிதளவு
ஆப்பம் மாவு – 2 கப்.

செய்முறை

முதலில் தேங்காயைத் துருவிக் கொள்ளவும். சட்டியில் நெய் ஊற்றி தேங்காய்த் துருவல், முந்திரிப்பருப்பு, ஏலக்காய் தூள் என மூன்றையும் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு, அதில் பாகு காச்சிய வெல்லம் சேர்த்து கலந்து கொள்ளவும். அதை ஆற வைத்துக்கொள்ளவும். அடுப்பில் பனியாரச் சட்டி வைத்து நெய் சேர்த்து காய்ந்த உடன் ஒரு ஸ்பூன் ஆப்ப மாவு எடுத்து குழியில் ஊற்றி சட்டியை சுழற்றி கொள்ளவும். பிறகு சட்டியை முடி வைக்கவும். வெந்த உடன் தட்டில் மாற்றி அதன் நடுவில் தேங்காய் கலவை வைத்து பரிமாறினால் சுவையான மினி ஸ்வீட் ஆப்பம் ரெடி.

 

Related posts

சைனீஸ் காளான் சூப்

சாக்லெட் கப்ஸ்

துவரம் பருப்பு இட்லி உப்புமா