கேரள மாஜி அமைச்சர் சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் உம்மன் சாண்டி அமைச்சரவையில் கலால், துறைமுகம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே பாபு. இவர் கடந்த 207 முதல் 2016 வரை வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத் துறையும், மாநில லஞ்ச ஒழிப்புத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இது தொடர்பாக பலமுறை கே.பாபுவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் இவரது ரூ.25.82 மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. கே.பாபு தற்போது எர்ணாகுளம் மாவட்டம் திருப்பூணித்துரா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது