கேரளாவில் பிளஸ் 2 ரிசல்ட் ரத்து என்று பொய் செய்தி வெளியிட்ட பாஜ கவுன்சிலர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த வாரம் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 82.95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 76.13 சதவீதமும், மாணவிகள் 89.31 சதவீதமும் தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்தநிலையில் ஒரு யூடியூப் சேனலில் பிளஸ் டூ ரிசல்ட் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக கேரள கல்வித் துறை சார்பில் திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அந்த யூடியூப் சேனலை நடத்துவது கொல்லத்தை சேர்ந்த நிகில் மனோகர் என்பது தெரியவந்தது. நிகில் மனோகர் கொல்லம் மாவட்டம் போருவழி பேரூராட்சி 8வது வார்டு பாஜ கவுன்சிலராக உள்ளார். தொடர்ந்து நேற்று காலை திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் கவுன்சிலர் நிகில் மனோகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை தொடக்கம்

கடந்த 15 நாட்களில் பஞ்சாப் மாநில எல்லையில் 20 பாகிஸ்தான் டிரோன்கள் பறிமுதல்: எல்லைப் பாதுகாப்பு தகவல்

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல்