கனகதுர்கை அம்மன் கோயில் மலையில் தீயணைக்க சென்ற வாகனத்தின் பிரேக் பழுது

*சாலையோர தடுப்பில் மோதி நிறுத்திய டிரைவர்

*விஜயவாடாவில் பரபரப்பு

திருமலை : கனகதுர்கை அம்மன் கோயில் மலை மீது ஏற்பட்ட தீயை அணைக்க சென்ற வாகனத்தில் பிரேக் செயல் இழந்ததால் அதன் டிரைவர் சாலையோர தடுப்பில் மோதி வாகனத்தை நிறுத்தினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டம், விஜயவாடாவில் புகழ்பெற்ற கனகதுர்கை அம்மன் கோயில் மலை மீது அமைந்துள்ளது.

தற்போது வெயில் வாட்டி வதைப்பதாலும், இலையுதிர் காலம் என்பதாலும் மலையில் மரம், செடிகள் காய்ந்து காணப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென மலையில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கோயில் நிர்வாகம் மூலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலையில் ஏற்பட்ட தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் பக்தர்கள், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

அதன் பின்னர் தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனம் விஜயவாடா நோக்கி புறப்பட்டது. அப்போது மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது வாகனத்தின் பிரேக் திடீரென செயல் இழந்தது. இதனை உணர்ந்த வாகனத்தின் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு வாகனத்தை மலையின் தடுப்பு சுவர் பக்கம் திருப்பியுள்ளார். இச்செயலால் பக்கவாட்டில் மோதி வாகனத்தின் வேகம் முழுமையாக குறைந்து சாலையோரம் நின்றது.

இதில் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. பின்னர், தீயணைப்பு வாகனத்தில் இருந்த வீரர்கள் பத்திரமாக எவ்வித காயமும் இன்றி வெளியேறினார்கள். மலையில் ஏற்பட்ட தீயிணை அணைத்துவிட்டு மீண்டும் தீயணைப்பு நிலையதிற்கு சென்ற வாகனத்தில் பிரோக் செயல் இழந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,430 பேர் ஈடுபட உள்ளனர்: மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்

ஜாமினை நீட்டிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளிபடி செய்தது உச்சநீதிமன்றம்

ஜாமினை நீட்டிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!