பாஜக கூட்டணியில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு இன்று மாலை அறிவிப்புகள் வெளியிடப்படும்: ஏ.சி.சண்முகம் பேட்டி

ஈரோடு: பாஜக கூட்டணியில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு இன்று மாலை அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் , அரசியல் கட்சியினர் தங்கள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை இறுதி செய்து வருகின்றனர். இந்த வகையில் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் தமிழ்நாடு பாஜக தீவிரம் காட்டி வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக ஒரே கூட்டணியில் இருந்த நிலையில் தற்போது இரு கட்சிகளும் தனித்தனியாக பிரிந்து தேர்தலை சந்திக்கின்றன. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் களம் காண இருக்கின்றன.

இந்நிலையில், பாஜக கூட்டணியில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு இன்று மாலை அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை அழைத்துள்ளனர். எங்களையும் அழைத்துள்ளனர். தொகுதி பங்கீட்டிற்கு பிறகு அடுத்தக்கட்ட தேர்தல் பணிகளை பாஜக தீவிரப்படுத்தும். பாஜக கூட்டணியில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு இன்று மாலை அறிவிப்புகள் வெளியிடப்படும். அனைத்து கட்சிகளுடனும் இன்று மாலை தொகுதி பங்கீடு முடிவாகி கையெழுத்தாக இருக்கிறது என்று அவர் கூறினார்.

Related posts

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்