ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

ராஞ்சி: ஜார்க்கண்டில் காங்கிரஸ் எம்எல்ஏ பிரதீப் யாதவ் மீதான பண மோசடி வழக்கில் அவரது வீடு, அலுவலகம் உள்பட 12க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி வருகிறது. பொரையாகத் தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரதீப். இவர் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவராகவும் உள்ளார். யாதவ் நிலக்கரி வர்த்தகம் , சிவில் ஒப்பந்தங்களை நிறைவேற்றுதல், இரும்பு தாது பிரித்தெடுத்தல் மற்றும் இரும்பு தயாரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுடன் சேர்ந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை கடந்த ஆண்டு சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே விருதுநகர் பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம்: எஃப்.ஐ.ஆர்.-ல் தகவல்

சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நீதியும் நிவாரணமும் பெறுவது மாற்றத்தின் மிகப்பெரிய அறிகுறி: ஆதித்ய தாக்கரே

குற்றச் செயலில் ஈடுபடுவோர் திருந்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து