விளக்கு பற்ற வைத்தபோது தீயில் கருகிய கல்லூரி மாணவி சாவு

 

ஈரோடு, மே 31: பெருந்துறையில் விளக்கு பற்ற வைத்தபோது தீயில் கருகிய கல்லூரி மாணவி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் மாவட்டம், தலைவாசல் காமக்காபாளையத்தை சேர்ந்தவர் ரவி (52). இவரது மகள் தாரணி (19). இவர், ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியல் 2ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக கல்லூரி அருகில் உள்ள கள்ளியம்புதூர் ரோடு, ராம்பிரசாத் மருத்துவமனை அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எடுத்து தங்கி இருந்தார்.

கடந்த 20ம் தேதி மாலையில், விளக்கு வைப்பதற்காக தீப்பற்ற வைக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அவரது நைட்டியில் தீப்பிடித்துவிட்டது. இதையடுத்து, சக மாணவிகள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தாரணியின் உடலில் அதிக அளவில் தீக்காயம் ஏற்பட்டிருந்ததையடுத்து, உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தாரணி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மதியம் உயிரிழந்தார்.
இதுகுறித்து, பெருந்துறை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவன் தற்கொலை: தாம்பரம் அருகே சோகம்

தண்டையார்பேட்டையில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை: 5 பேருக்கு வலை

தனியார் கம்பெனியின் கெமிக்கல் தொட்டியில் விழுந்த ஊழியர் பலி