ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வழக்கு மே 6-க்கு ஒத்திவைப்பு..!!

டெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீதான வழக்கை மே 6-க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக, ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மேலும், உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி மே 6-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது.

Related posts

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிந்து 72,987 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு

சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையே கழிவறை வசதியுடன் கூடிய மின்சார ரயில் விரைவில் இயக்கம்

ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்