ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தடை நீட்டிப்பு

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் தங்கம், வெள்ளி, வைர நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபக் மற்றும் தீபா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், அந்த நகைகளை ஒப்படைக்க தடை விதித்தது.

இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தங்கள் வாதத்தை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்று கூறியதுடன் தமிழ்நாட்டிற்கு ஆபரணங்கள் அனுப்பி வைக்க விதித்திருந்த தடை உத்தரவை மேலும் நீட்டித்து உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.

Related posts

கேரள தம்பதி, மகனுடன் காரில் தற்கொலை: கம்பம் அருகே சோகம்

நெல்லையில் எச்சரிக்கையையும் மீறி அலட்சியம்; சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் பஸ்சை இயக்கிய டிரைவர் சஸ்பெண்ட்: வீடியோ வைரலானதால் அதிரடி

யூடியூபர் சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்