ஜம்மு – காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் படையினரும் காஷ்மீர் போலீசாரும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ஹாலன் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அம்மாவட்ட போலீசாரும் ராணுவ வீரர்களும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளன. இதனிடையே தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்