பாஜ எம்பி பிரிஜ் பூஷன் வீட்டில் விசாரணை

புதுடெல்லி: மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு சொந்தமான உத்தப்பிரதேசத்தில் உள்ள வீட்டில் டெல்லி போலீசார் நேற்று விசாரணை நடத்தினார்கள். மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பிரிஜ் பூஷன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் கோண்டாவில் உள்ள பிரிஜ் பூஷன் வீட்டிற்கு டெல்லி போலீசார் நேற்று நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். அவரது கூட்டாளிகள் மற்றும் பிரிஜ் பூஷன் ஓட்டுனர் உட்பட வீட்டில் உள்ள பணியாளர்கள் அடையாள அட்டைகள் சோதனை செய்யப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘பாஜ எம்பிக்கு எதிரான வழக்கில் தொடர்புடைய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் அவை சமர்பிக்கப்படும்” என்றனர்.

Related posts

தென்காசி பகுதியில் கனமழையால் குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு!

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து ஒருவர் உயிரிழப்பு

செய்யும் தொழிலே தெய்வம்: பணியை துவக்குவதற்கு முன் நிறுவனத்தின் வாயிலை தொட்டு வணங்கி பின்னர் பணியை தொடங்கும் மூதாட்டி