ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக்கை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் : மும்பை ஐகோர்ட்

மும்பை : ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ. சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக்கை சிபிஐ கைது செய்தது சட்டவிரோதம் என்று மும்பை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக்கிற்கு இடைக்கால ஜாமினை உறுதி செய்தது மும்பை உயர்நீதிமன்றம். வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாக சந்தா கோச்சார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடன் பெற தகுதியில்லாத வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதன் மூலம் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் ரூ.64 கோடி பெற்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை காலை கலைஞர் நூற்றாண்டு நிறைவு

பூக்கடை பகுதியில் பரபரப்பு மருத்துவக்கல்லூரி பெண்கள் விடுதியை பார்த்தபடி நிர்வாணமாக நின்று சைகை காட்டிய வாலிபர் கைது

தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு