சட்டவிரோத மது விற்பனையில் ஐஏஎஸ்க்கு தொடர்பு: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை ராய்ப்பூர் மாநகராட்சி மேயர் அய்ஜாஸ் தேபாரின் அண்ணனும் தொழிலதிபருமான அன்வர் தேபாரை கைது செய்துள்ளது. அன்வரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக ராய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தது. அதில், மது விற்பனையில் ரூ.2000 கோடி ஊழல் நடந்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரி அனில் டுட்டேஜாவுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளார். மதுபான ஊழல் பணம் தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளது.

Related posts

பெரியகுளத்தில் தொடர் மழையால் சோத்துப்பாறை அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாகிறது: பலத்த மழைக்கு வாய்ப்பு

சிசுவின் பாலினம் குறித்த வீடியோவை யூடியூபிலிருந்து நீக்கிவிட்டதாக யூடியூபர் இர்ஃபான் விளக்கம்!