சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 புதிய நீதிமன்ற அறைகள் திறப்பு: பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா திறந்துவைத்தார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே 48 நீதிமன்ற அறைகள் உள்ளன. இந்த எண்ணிக்கையை 57 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் 5 அறைகள் காணொலி காட்சி வாயிலான விசாரணைக்காக மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளன. அதன் முதல் கட்டமாக உயர் நீதிமன்ற பிரதான கட்டிடத்தில் இருந்த நீதிபதிகளின் அறைகளில் மாற்றங்களை செய்து 6 புதிய அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளை நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா திறந்துவைத்தார். அப்போது ஒரு நீதிமன்றத்தில் நீதிபதி இருக்கையில் அமர்ந்தும் புதிய அறையை ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், சி.வி.கார்த்திகேயன், பி.டி.ஆதிகேசவலு, சி.சரவணன், ஜி.சந்திரசேகரன், முகமது சபீக், சுந்தர் மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர். அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன், அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், மாநில பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உறுப்பினர் எம்.வேல்முருகன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் சுந்தரேசன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் முன்னாள் தலைவர் ஜி.மோகன்கிருஷ்ணன், முன்னாள் செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து துவக்கம்

வருசநாடு சுற்றுவட்டாரத்தில் கனமழையால் மலைசாலைகள் கடும் பாதிப்பு