காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்துக்கு திமுக விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகள் நியமனம்

சென்னை: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்துக்கு, திமுக விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, திமுக விவசாயத் தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, மாவட்ட செயலாளர் ஒப்புதலோடு திமுக விவசாயத் தொழிலாளர் அணியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட விவசாயத் தொழிலாளர் அணி தலைவராக மொ.கோ.மணி நியமிக்கப்படுகிறார். துணை தலைவராக ரா.குப்புசாமியும், அமைப்பாளராக அசோகனும் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் துணை அமைப்பாளர்களாக கிருஷ்ணன், வீரசாமி, ஆர்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.கே.சசிக்குமார் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் சின்னத்துரை குடும்பத்தினருக்கு 5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தினசரி 400 பேர் வரை செல்ல ஏற்பாடு

பெரம்பலூர் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை!