பேராசிரியையுடன் சினிமாவுக்கு சென்ற அரசு மருத்துவக் கல்லூரி மாணவனுக்கு அடி உதை: சக மாணவர்களிடம் விசாரணை

சோழிங்கநல்லூர்: பேராசிரியையுடன் சினிமாவுக்கு சென்ற ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மாணவனை குடிபோதையில் சக மாணவர்கள் அடித்து உதைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கணவாய்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் லெனின் பிரபு (30). இவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் ரேடியோலாஜி இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, ஒரு பேராசிரியையுடன் அண்ணா சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் இரவு காட்சிக்குச் சென்றுவிட்டு, நள்ளிரவு 2 மணியளவில் கல்லூரி விடுதிக்கு வந்து பேராசிரியையை இறக்கிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

அப்போது அங்கு போதையில் இருந்த இறுதி ஆண்டு படிக்கும் மாணவன் இளவரசன், 4ம் ஆண்டு படிக்கும் ஹரிபிரசாத் ஆகிய இருவரும் லெனின்பிரபுவின் பைக்கை பிடித்து இழுத்து, தகாத வார்த்தையால் திட்டி, அவரது கன்னத்தில் அடித்துள்ளனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இடது கால் பாதம், வலது கையில் சிராய்ப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்நோயாளியாக லெனின் பிரபு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்டான்லி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

‘மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கல…’ தாலி கட்டவந்தபோது தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: சேலத்தில் சினிமாபோல் பரபரப்பு சம்பவம்

விக்கிரவாண்டியில் பாமக போட்டியா? அன்புமணி பேட்டி

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது