ரூ4.75 கோடி தங்கம் கடத்தியவர் கைது

ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கடத்தல்காரரை சுங்கத்துறையினர் நேற்று கைது செய்தனர். ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பேருந்து நிலையம் பகுதியில் கடந்த ஜன. 4ம் தேதி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர், ஒரு டூவீலரை சுற்றி வளைத்து கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். அப்போது கடத்தல்காரர் தப்பி ஓடினார். அவரிடமிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4.75 கோடி மதிப்பிலான 7.700 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தப்பி ஓடிய நபர் மற்றும் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் விசாரணை நடத்தினர். இதில் இலங்கையிலிருந்து தங்கத்தை கடத்தி வந்த நபர், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஐசக் (47) என தெரிந்தது. நேற்று அதிகாலை தங்கச்சிமடத்தில் சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஐசக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

விராலிமலையில் பட்டாசு கிடங்கில் நடந்த வெடிவிபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி; 2 பேர் படுகாயம்

கிடப்பில் போடப்பட்ட சிவகங்கை புறவழிச்சாலை பணி தீவிரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி