மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


சென்னை: தமிழகப் பெண் காவலர்களை இழிவாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள யுடியூபர் சவுக்கு சங்கரை கண்டித்து, தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் தலைமை வகித்தார். வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் மற்றும் செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, கவுன்சிலர் சுகன்யா செல்வம், நிர்வாகிகள் ஆலிஸ் மனோகரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் பேசியதாவது: வடஇந்தியாவில் பாஜ ஆளும் மாநிலங்களில் பெண்களை பல்வேறு வகையில் பலர் விமர்சித்து வருகிறார்கள். அதே கலாச்சாரம் தமிழகத்தில் தொடங்கி உள்ளது.

யுடியூபர் சவுக்கு சங்கர் தற்போது, பெண் போலீசார் குறித்து மிகவும் இழிவாக விமர்சித்துள்ளார். இப்படிப்பட்ட ஒரு இழிவான ஒரு நபருக்கு ஆதரவாக பாஜ தேசிய தலைவர் பேசுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. எனவே தமிழக போலீசார் சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்து, ஜாமினில் வெளியேவர முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பெண் போலீசார் மாவட்டந்தோறும் சவுக்கு சங்கர் மீது புகார் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

5ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: 5 மணி வரை 56.68% வாக்குகள் பதிவு

குமரி முழுவதும் விடிய விடிய மழை: பேச்சிப்பாறை அணையில் 1070 கன அடி தண்ணீர் திறப்பு

மக்களவை தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு