பல கோடி தங்கம் பறிமுதல்

மண்டபம்: இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் வந்த பைபர் படகு ராமேஸ்வரம் அருகே மண்டபம் தென் கடற்கரை நோக்கி சென்றது. படகை அதிகாரிகள் சுற்றி வளைத்து, அதிலிருந்த வேதாளையைச் சேர்ந்த முஹமது நாசர், அப்துல் கனி, பாம்பன் பகுதியைச் சேர்ந்த ரவி ஆகியோரிடம் விடிய, விடிய விசாரித்தனர்.மேலும், வேதாளை கடற்கரை பகுதிக்கு காரில் வந்த வேதாளையைச் சேர்ந்த சாதிக் அலி, முஹமது அசாருதீன் ஆகியோரை கடலோர காவல் படையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் படகில் மறைத்து வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான உருக்கிய தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவர்களது வீடுகளிலும் சோதனை தொடர்கிறது.

Related posts

நீலகிரியில் வறட்சியை எதிர்கொள்ள முடியாமல் மாடுகள் உயிரிழப்பு: போர்க்கால அடிப்படையில் அரசு கால்நடைகளை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை

ராணிப்பேட்டை அருகே உள்ள மலைக்கோவிலில் சாமி தரிசனம் படியேறிய நபர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு