ராணிப்பேட்டை அருகே உள்ள மலைக்கோவிலில் சாமி தரிசனம் படியேறிய நபர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

ராணிப்பேட்டை: சோளிங்கர் அருகே அருள்மிகு யோக நரசிம்மர் கோவிலில் பெங்களூரை சேர்ந்த நபர் சாமி தரிசனம் செய்வதற்காக 1305 படிகள் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் அருள்மிகு யோக நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் 1305 படிகள் கோவிலுக்கு படிகள் வழியாக ஏறிச்சென்றார். அப்போது 1200வது படியை கடந்தபோது முத்துக்குமாருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முத்துக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது வெயில் கொளுத்தி வருவதால் முத்துக்குமார் வெயிலின் தாக்கத்தால் இறந்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது. சாமி தரிசனம் செய்ய கோவிலின் படியேறி நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு

முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு ரூ.1 லட்சம் பஞ்சப்படியுடன் ஓய்வூதியம்: வேலைநிறுத்தம் செய்யப் பேராசிரியர்கள் மற்றும் பல்கலை. தொழிலாளர் சங்கத்தினர் முடிவு

ராணுவப் புரட்சியின் போது மனித உரிமை மீறலுக்கு அதானி நிறுவனம் துணை போனதாக நார்வே வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு