ஜெர்மனியின் முனீச்சில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்ற விமானத்தில் கணவன்-மனைவி இடையே சண்டை

டெல்லி: ஜெர்மனியின் முனீச்சில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்ற விமானத்தில் கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. நடுவானில் மனைவியுடன் சண்டையிட்ட கணவர், சக பயணிகளையும் அவதூறாக பேசி தகராறு செய்துள்ளனர். விமான பணியாளர்கள் சமாதானம் செய்தபோதும் குடிபோதையில் இருந்த கணவர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். நிலைமை கட்டுக்குள் வராததால் விமானத்தை 1 பாகிஸ்தானில் தரையிறக்க விமானி முயன்றுள்ளார். பாகிஸ்தானில் தரையிறங்க அனுமதி கிடைக்காததால் டெல்லியில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்த கணவரை போலீசிடம் ஒப்படைத்துவிட்டு விமானம் பாங்காக் புறப்பட்டு சென்றது.

Related posts

தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: அதிமுக கண்டனம்

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம்: மல்லிகார்ஜுன கார்கே குற்றசாட்டு

தங்கம் விலை பவுனுக்கு 120 குறைந்தது