கேலோ இந்தியா இளையோர் விளையாட்டை சிறப்பாக நடத்த ஏற்பாடு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள், தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் நேற்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு-2023 போட்டிகள் நடத்துவது தொடர்பாக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை முகாம் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதில், இந்திய விளையாட்டு ஆணைய துணை இயக்குநர் எக்டா விஷ்னாய், மண்டல இயக்குநர் டாக்டர் கிஷோர், துணை இயக்குநர் சிபாநந்தா மிஸ்ரா, விளையாட்டுத் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனையின் போது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள், தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தமிழ்நாட்டில் இந்திய விளையாட்டு ஆணைய மண்டல அலுவலகம் அமைப்பது தொடர்பான கோரிக்கையின் முன்னேற்றம் குறித்தும், தமிழ்நாட்டில் இந்திய விளையாட்டு ஆணைய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Related posts

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் பலி! பம்மல் தனியார் மருத்துவமனையில் உரிமம் ரத்து செல்லாது! : சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!!

கேரளாவில் மயோனைஸ் சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு: அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதி

வெறுப்பு பேச்சு விவகாரம்; மோடிக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு: கர்நாடகா நீதிமன்றம் உத்தரவு