கேரளாவில் மீன்பிடி தடைகாலம்

திருவனந்தபுரம்: கேரளாவில் 52 நாட்களுக்கான மீன்பிடித் தடைக்காலம் நேற்று நள்ளிரவு தொடங்கியது. கேரளாவில் மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவு தொடங்கியது. அதன்படி ஜூலை 31ம் தேதி வரை 52 நாட்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கக் கூடாது. கேரள கடல் எல்லைக்கு உள்பட்ட 12 நாட்டிக்கல் மைல் தொலைவு வரை கடலின் அடிப்பகுதியில் மீன் பிடிக்கும் விசைப்படகுகளுக்கு இந்தத் தடை பொருந்தும். இதனால் ஆழ்கடலில் மீன் பிடிக்கும் பெரும்பாலான விசைப்படகுகள் நேற்று கரைக்குத் திரும்பின. தமிழ்நாடு, கர்நாடகா உள்பட வெளிமாநில விசைப்படகுகளும் கேரள எல்லையை விட்டு திரும்பிச் செல்ல வேண்டும் என்று கேரள மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

Related posts

பிரதமர் நரேந்திர மோடியின் ‘முஜ்ரா’ பேச்சு: தலைவர்கள் கடும் கண்டனம்

9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்

மே-27: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை