ஏதர் ரிட்சா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஏதர் எனர்ஜி நிறுவனம் ரிட்சா என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஏதர் 450 எக்ஸ் டூவீலரில் உள்ளது போன்றே தொடுதிரையுடன் கூடிய டிஎப்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், நேவிகேஷன், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி ஆகியவை இதில் உள்ளது. தவிர, ஏதர் ஸ்டேக் 6 தொழில்நுட்பம், பார்க் அசிஸ்ட், ஆட்டோ ஹில் ஹோல்டு, ஸ்மார்ட் எக்கோ மற்றும் ஜிப் ஆகிய டிரைவிங் மோடுகள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் உள்ள மோட்டார் 3.7 நொடிகளில் மணிக்கு 40 கி.மீ வேகத்தை எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ வேகம் வரை செல்லும். 2.9 கிலோவாட் அவர் மற்றும் 3.7 கிலோவாட் அவர் என இரண்டு வித பேட்டரி தேர்வுகளில் கிடைக்கிறது. முழுமையாக சார்ஜ் செய்தால், 2.9 கிலோவாட் அவர் பேட்டரி அதிகபட்சமாக 105 கி.மீ தூரம் வரையிலும், 3.7 கிலோவாட் அவர் பேட்டரி 125 கி.மீ தூரம் வரையிலும் செல்லும். எல்இடி ஹெட்லாம்ப், ஸ்லீக் எல்இடி டெயில் லைட், 12 அங்குல அலாய் வீல்கள் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. துவக்க ஷோரூம் விலையாக ரூ.1.1 லட்சம், டாப் வேரியண்ட் ரூ.1.44 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

மே-17: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

₹60 லட்சம் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்: 2 பேர் அதிரடி கைது

இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்