எம்ஜி ஹெக்டார் பிளாக் ஸ்டோர்ம்

எம்ஜி நிறுவனம், ஹெக்டார் பிளாக் ஸ்டோர்ம் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. அஸ்டார் பிளாக்ஸ்டோர்ம் மற்றும் கிளோஸ்டர் பிளாக்ஸ்டோர்ம் ஆகியவற்றைப் போல, முற்றிலும் கருப்பு நிற வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பம்பர்கள், காலிபர்களில் சிவப்பு நிறம் ஹைலைட்டாக இடம் பெற்றுள்ளது. காரின் உட்புறமும் கருப்பு தீம் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், பவர் டிரைவர் சீட், லெவல் 2 அடாஸ் , டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்இடி லைட்டுகள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கார், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அல்லது 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் என இரண்டு வித விருப்பத் தேர்வுகளில் கிைடக்கிறது. பெட்ரோல் மோட்டார் அதிகபட்சமாக 141 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் 168 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஷோரூம் விலையாக, பிளாக்ஸ்டோர்ம் சிவிடி சுமார் ரூ.21.24 லட்சம், டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் சுமார் ரூ.21.94 லட்சம், சிவிடி 7 சீட் சுமார் ரூ.21.97 லட்சம், டீசல் மேனுவல் 7 சீட் ரூ.22.54 லட்சம், டீசல் மேனுவல் 6 சீட் ரூ.22.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவால், ஆம்ஆத்மி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு