காளான் கைமா

தேவையான பொருட்கள்:

400 கிராம் காளான் (பொடியாக கட் செய்தது)
100 கிராம் பெரிய வெங்காயம் (பொடியாக கட் செய்தது)
2 தக்காளி (பொடியாக கட் செய்தது)
2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
2 டீஸ்பூன் கறிமசாலா தூள்
1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
1 டீஸ்பூன் மிளகுத் தூள்
1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலைத் தூள்
4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
தேவையான அளவு உப்பு
சிறிதளவு கறிவேப்பிலை
2 டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
1 டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு
சிறிதளவு தாளிப்பு வடகம்.

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, கறிமசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதில் காளானை சேர்த்து நன்கு வதக்கவும். 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி 10 நிமிடம் வேக வைக்கவும். வெந்ததும் பொட்டுக்கடலைத் தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து கெட்டியானதும் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான காளான் கைமா ரெடி!

Related posts

மிளகு காளான் மசாலா

வெண்டைக்காய் கடலை மசாலா

கடுகுப் பொடிக் குழம்பு