அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது!!

சென்னை:தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த, சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக இன்று தொடங்கியது.2023-24ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 430 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1,57,378 காலி இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், விளையாட்டு பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது. இதில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறன்னாள் படைவீரர்கள் பிரிவில் 11 இடங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 579 ப்பு பிரிவில் வரும் மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வு இன்று தொடங்கி நடக்க இருக்கிறது.

இவர்களுக்கு விளையாட்டு பிரிவில் 38 இடங்களும், முஇடங்களும் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு 261 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்யவும், அன்று இரவே தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்பட்டு, மறுநாள் (23ம் தேதி) பிற்பகல் 3 மணிக்குள் அதனை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் மூலமாக கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவில் வரும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளை மறுதினம் முதல் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது நிறைவு பெற்றதும், ஜூலை 28ம் தேதி பொதுப்பிரிவு கலந்தாய்வு நடக்க உள்ளது.

Related posts

சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தடுக்க வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செல்வப்பெருந்தகை டிஜிபியிடம் புகார்

முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் முயற்சிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!