அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

டெல்லி: அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். தான் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடந்தார். முதலமைச்சர் என்பதற்காக எந்த சலுகையும் காட்ட முடியாது எனக் கூறி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் கெஜ்ரிவால் சதி செய்தது உறுதியாகி இருக்கிறது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!