18 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடம்: தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 18 மாவட்ட கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கான திருத்திய தேர்வு பட்டியலை தயாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இறுதி முடிவுகளை வெளியிடக் கூடாது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற பிற விண்ணப்பதாரர்களின் நியமன வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பணியில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஆணையிட்டு, வழக்கின் விசாரணையை ஐகோர்ட் ஜூன் 10-க்கு ஒத்திவைத்தது.

Related posts

உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்வு

நீட் தேர்வு முறைகேடு: மேலும் 9 மாணவர்களுக்கு நோட்டீஸ்

ஜப்பானில் கடந்த சில நாட்களாக அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது ஜூன் 2 முதல் பாதிப்பு அதிகரிப்பு