திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கன்னியாகுமரியில் கருத்து கேட்பு

கன்னியாகுமரி : மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கன்னியாகுமரியில் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. கனிமொழி எம்.பி. தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர், குமரியில் மக்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் பரிந்துரைகளை பெறுகின்றனர். நாகர்கோவில் தேரேகால் புதூரில் வணிகர்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்பு நடைபெறுகிறது.

Related posts

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வாழ்த்து

குமரியில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு எழுவதால் எச்சரிக்கை

கேரள மாநிலம் இன்றும் 2-வது நாளாக நில அதிர்வு