கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததாக பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு..!!

கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே மின்மாற்றிகளில் இணைப்பை துண்டித்து விட்டு தீப்பந்தத்துடன் மர்மநபர்கள் நின்றதை பார்த்த பொதுமக்கள் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்ததாக கூறியதால் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் மாங்காய் குள தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அடிப்பகுதியில் தேனீக்கள் கூடு கட்டியிருந்ததை சிலர் பார்த்திருக்கின்றனர்.

இதை எடுப்பதற்காக சிலர் தொட்டியின் மீது இருந்த மின்மாற்றியில் இணைப்பை துண்டித்து விட்டு தீப்பந்தத்தோடு எறியுள்ளனர். அப்போது அவர்கள் பொதுமக்களை கண்டதும் தொட்டியிலிருந்து இறங்கி அங்கிருந்த சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து தப்பியோடினர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் நிகழ்விடத்திற்கு சென்று குடிநீர்த்தொட்டியை பார்வையிட்டனர்.

அப்போது தொட்டியின் கீழ் இருந்த தேனீக்களின் கூடு தீவைத்து அழிக்கப்பட்டிருந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். ஆனால் தேனீக்களின் கூட்டை அழிப்பதுபோல் நடித்து குடிநீரில் விஷம் கலந்து இருக்கலாம் என்று பொதுமக்கள் குறி பரபரப்பு ஏற்படுத்தினர். இதை அடுத்து தொட்டியில் இருந்த 3 லட்சம் லிட்டர் குடிநீரை வெளியேற்றி பேரூராட்சி ஊழியர்கள் தொட்டியை சுத்தம் செய்தனர். முன்னதாக தொட்டியில் இருந்து 5 லிட்டர் தண்ணீரை சேகரித்து பகுப்பாய்வு சோதனைக்காக சென்னை கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. பகுப்பாய்வு முடிவு வந்ததும் அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related posts

இலங்கைக்கு ₹4 கோடி மதிப்பு மாத்திரைகள் கடத்தியவர் கைது

எஸ்.ஐ.க்கு ‘பளார்’ விட்ட பாஜ கவுன்சிலர் கைது

கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது