காங்கிரஸ் கட்சியின் மேல்முறையீட்டு வழக்கு; வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைக்கு எதிரான மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை தீர்ப்பாயம் கடந்த மாதம் 16ம் தேதி நேற்று அதிரடியாக முடக்கியது. இதில் கடந்த 2018-19ம் நிதியாண்டுக்கான கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததால் வங்கிக் கணக்குகளை முடக்கியதாகவும், ரூ.210 கோடி அபராதம் காங்கிரஸ் கட்சிக்கு விதிப்பதாகவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தரப்பில் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் அனைத்தும் மீண்டும் செயல்பட தற்காலிகமாக நிவாரணம் வழங்கி இருந்த நிலையில், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கை கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக தள்ளுபடி செய்திருந்தது. அதேப்போன்று ரூ.65 கோடி வரிபாக்கி தொகையை காங்கிரஸ் கட்சியிடம் இருந்து வருமானத்துறை தரப்பில் வசூலிக்க தடையில்லை என்றும் தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வருமானவரித்துறை ரூ.65 கோடி வரிபாக்கி தொகையை காங்கிரஸ் கட்சி இடமிருந்து வசூலிக்க தடையில்லை என்ற வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் மேற்கண்ட மனுவானது டெல்லி உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் அமர்வு நீதிபதிகளான யஷ்வந்த் வர்மா மற்றும் புருஷேந்திர குமார் கவுரவ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர். குறிப்பாக சில மதிப்பீட்டு ஆண்டுகள் தொடர்பாக நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ரேவண்ணா இடைநீக்கம்?: மஜத செயற்குழு இன்று கூடுகிறது

ராமநாதபுரம் அருகே ரூ.4.5 கோடி மதிப்பு தங்கத்தை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது..!!

மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது..!!