கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் 7-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ: ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரம்

கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணி 7-வது நாளாக நீடிக்கிறது. கோவை ஆலந்துறை மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த 11-ம் தேதி தீ பற்றியது. தீ மளமளவென சுமார் 150 ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதி முழுவதும் பரவியது. கோவை, உடுமலை, நீலகிரி, ஈரோடு, சிறுமுகை வனச்சரகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் நேற்று ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.

சுமார் 22,000 லிட்டர் தண்ணீரை கொண்டு அதிகளவில் தீ பற்றிய 4 இடங்களிலும் முழுமையாக தீ அணைக்கப்பட்டது. இதுவரை 90% அளவிற்கு தீ அணைக்கப்பட்டு விட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எஞ்சிய பகுதிகளில் பற்றி எரியும் தீயை அணைக்க சேலம் வனச்சரகத்தில் இருந்து கூடுதல் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 7-வது நாளாக தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தீ பரவும் வேகத்தை பொறுத்து தீயை அணைக்கும் பணியில் மீண்டும் ஹெலிகாப்டர் ஈடுபடுத்துவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல்

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்: விசாரணை அறிக்கை இன்று தமிழக அரசிடம் சமர்பிப்பு

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா?: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்