முத்திரைத் தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றம்..!!

சென்னை: முத்திரைத் தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. முத்திரைத்தாள் கட்டண உயர்வு தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மசோதாவை தாக்கல் செய்தார். இந்நிலையில், அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட திருத்த முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம், 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம், 200 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2001ம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை.

தற்போது மாற்றி அமைக்கப்படும் முத்திரை தாள் கட்டணம் 10 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. நீதித்துறை அல்லாத முத்திரைத்தாள்களை அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக அதிகரித்துள்ளதால் கட்டண உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. நிறுவனங்களின் ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டண உயர்வு உடனே நடைமுறைக்கு வந்துள்ளது. முத்திரைத்தாள் கட்டண உயர்வுகான சட்ட மசோதாவுக்கு ஆரம்ப நிலையிலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் நாகை மாலி எதிர்ப்பு தெரிவித்தார்.

Related posts

நாகர்கோவில் அருகே இன்று அதிகாலை வேனுடன் எரிந்து சாம்பலான இசைக் கருவிகள்: போலீசார் தீவிர விசாரணை

பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

திரவுபதி அம்மன் கோயில் கொடியேற்று விழா நடத்த 2வது முறையாக அதிகாரிகள் தடை: மரக்காணத்தில் போலீஸ் குவிப்பு-பதற்றம்