கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா: தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

கோவை: கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது. தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு ஜிபே மூலம் அண்ணாமலையே வாக்காளர்களுக்கு பணம் அனுப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கியிருந்து ஜிபே மூலம் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைப்படி பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் விதியை பின்பற்றவில்லை என்று திமுக தெரிவித்துள்ளது.

Related posts

கருவின் பாலினத்தை அறிவித்தால் கடும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் குறைவான ATM மையங்கள்; சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் விளக்கம்!

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு வீரர் சாதனை!