இருசமூகத்தினர் மோதல் மணிப்பூரில் மீண்டும் ஊரடங்கு அமல்

இம்பால்: மணிப்பூரில் இருசமூகத்தினர் மீண்டும் மோதியதால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மணிப்பூரில் மெய்டேய் இனத்தவர் மற்றும் குக்கி பழங்குடியின அமைப்பு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறை பல்வேறு இடங்களுக்கும் பரவி 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வன்முறையைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், தலைநகர் இம்பாலின் நியூ செக்கான் பகுதியில் மெய்டேய் மற்றும் குக்கி சமூகத்தினரிடையே நேற்று மீண்டும் மோதல் ஏற்பட்டது. உள்ளூர் மோதல் மற்ற இடங்களுக்கும் பரவும் அபாயம் இருந்ததால், மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் தொடர்ந்து முகாமிட்டு, ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

வளாக நேர்காணல் மூலம் 97% பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது: ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லூரி தகவல்

சரியாக உழைத்தால் வெற்றி; பட்டய கணக்காளர் ஆவது எளிது: எஸ்ஐஆர்சி தலைவர் ராகவன் ஊக்கம்

100% வேலை வாய்ப்பு பெற்று தரும் ஆச்சார்யா பெங்களூர் பி-ஸ்கூல்